Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“காலிபிளவர் vs ப்ரோக்கோலி”… எது உடம்புக்கு ரொம்ப நல்லது…? வாங்க பார்க்கலாம்..!!

நம் உடம்பிற்கு காலிஃப்ளவர் நல்லதா அல்லது ப்ரோக்கோலி நல்லதா என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.

நம் ஆரோக்கியத்திற்கு கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. அப்படி இன்று சந்தையில் காணப்படும் பல நன்மைகளை கொண்ட ஆரோக்கியமான காய்கறி காலிஃப்ளவர் மற்றும் ப்ரோக்கோலி இரண்டுமே குறைந்த கார்போஹைட்ரேட்களை கொண்டது. உயர்ந்த ஆக்சைடுகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டது. இதில் என்ன ஒரு குழப்பம் என்றால் ஒரே மாதிரியாக இருக்கும் இந்த காலிஃப்ளவர் மற்றும் ப்ரோக்கோலியில் எது சிறந்தது என்பது தான்.

இதற்கு என்ன வித்தியாசம் என்னவென்றால் இரண்டுமே சமமான பலன்களை கொண்டுள்ளது. இருப்பினும் இவ்விரு நன்மைகள், அவற்றை உங்கள் உணவில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காலிஃப்ளவர் மற்றும் ப்ரோக்கோலி சத்தான காய்கறிகள் தான். அதிக கலோரிகள் உள்ளது. வைட்டமின்கள் உள்ளது. நல்ல உடல் ஆரோக்கியத்தை தரும். இவை இரண்டிலும் நார்ச்சத்து, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது மட்டுமின்றி பலவகை பெரிய மற்றும் சிறிய ஊட்டச்சத்துகள் கொண்டுள்ளது.

காலிபிளவரில் உள்ள சத்துக்கள்:

காலிஃப்ளவரில்

  • கலோரிகள் : 27
  • கார்போஹைட்ரேட் : 5.5கி
  • பைபர் : 2கி
  • புரதம்: 2கி
  • வைட்டமின்- சி : 57%RDA
  • வைட்டமின் – பி6 : 14% RDA
  • ஃபோலேட் : 15% RDA
  • வைட்டமின் – இ : 1%RDA

ப்ரோக்கோலியில் உள்ள சத்துக்கள்:

பச்சையாக காணப்படும் ப்ரோக்கோலி உள்ள சத்துக்கள்

  • கலோரிகள் : 31
  • கார்போஹைட்ரேட் : 6கி
  • பைபர் : 2.5கி
  • புரதம்: 2.5கி
  • வைட்டமின்- சி : 90%RDA
  • வைட்டமின் – பி6 : 9% RDA
  • ஃபோலேட் : 14% RDA
  • வைட்டமின் – இ : 3%RDA

இரண்டுக்கும் இடையே வேறுபாடு உள்ளது. காலிஃப்ளவர் ப்ரோக்கோலி ஒப்பிட்டால் வைட்டமின் சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் அதிகமாக உள்ளது. இருப்பினும் இவை இரண்டும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது தான். ப்ரோக்கோலி ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் உணவுகள்.

இது பச்சைக் காய்கறிகள் ஆனது. இது உடல் வீக்கத்தை சரிசெய்யும், ரத்த சர்க்கரை அளவை குறைக்கும். உங்கள் வயதுக்கேற்ற நல்வாழ்க்கையை நடத்தும். காலிஃப்ளவரில் ஆற்றல்மிக்க மற்றும் வலுவான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளது.  உடலை பாதுகாப்பதில் இவை இரண்டுமே அதிகளவில் பயன்படுகின்றது.புற்று நோய் ஏற்படும் அபாயத்தை குறைப்பதற்கும் காலிஃப்ளவர் மற்றும் ப்ரோக்கோலி பயன்படுகிறது .

இரண்டில் எது சிறந்தது:

சிறிய வேறுபாடுகளைக் கொண்ட போதிலும்  இரண்டும் சக்திவாய்ந்த மற்றும் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. இதில் எது சிறந்தது என்பதை தீர்மானிப்பது கடினம். எந்த காய்கறி சிறந்தது என்பது உங்களது தேவை மற்றும் விருப்பத்தை சார்ந்து இருக்கும். சாப்பிடும் எண்ணம் இருந்தால் காலிஃப்ளவரை நல்லது. மாறாக அதிக வைட்டமின் மற்றும் தாதுக்கள் உணவோடு இருக்க விரும்பினால் ப்ரோக்கோலி நல்லது. வாரத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை இந்த காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Categories

Tech |