சசிகலாவின் மௌனத்திற்கு ஜோதிடர் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா சமீபகாலத்தில் விடுதலையாகி தமிழகத்திற்கு வந்தார். அவரின் வருகை தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது மௌனமாக இருந்து வருகிறார். அவரின் இந்த மௌனத்திற்கு ஜோதிடர் கொடுத்த அட்வைஸ் தான் முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
ஏனென்றால் சசிகலாவுக்கு ரேவதி நட்சத்திரம், மீன ராசி ஆகும். இந்த ராசியினருக்கு வரும் பிப்ரவரி 17ஆம் தேதிக்கு பின் தான் நல்ல நேரம் ஆரம்பம் ஆகிறது. ஆகையால் அதன் பின் அரசியல் ரீதியிலான சந்திப்புகளை வைத்துக் கொள்ளும்படியும் ஜோதிடர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் மோடி தமிழகம் வந்து சென்றுள்ளதால் தற்போதைக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும் சசிகலா நினைத்துள்ளார். ஆகையால் நீதி மன்றம் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் கொடுத்தபிறகு தனது ஆட்டத்தை தொடங்கலாம் என்பது தான் சசிகலாவின் திட்டமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.