விவசாயிகளின் போராட்டம் பலவீனம் அடையாது என்று விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் எந்த ஒரு முடிவுக்கும் வரவில்லை. இதையடுத்து வேளாண் சட்டங்களை அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசின் சட்டங்கள் ரத்து செய்ய கோரும் விவசாயிகள் போராட்டம் பலவீனம் அடையாது என்று இந்திய விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.
அரசு விழித்துக் கொள்ளவில்லை எனில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. விவசாயிகள் கடந்த 70 ஆண்டுகளாகவே விவசாயம் செய்து வருகின்றனர். ஆள் பற்றாக்குறை காரணமாக தற்போது விளைந்துள்ள பயிரை அறுவடை செய்வதில் சிக்கல் ஏற்பட்டால், ஒரு போகம் பயிர் இழப்பை தாங்கிக் கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.