Categories
உலக செய்திகள்

“யம்மாடியோவ்!” எக்கச்சக்கமான தங்க நகைகள்… ரகசிய அறையில் பதுக்கி வைத்த காவலர்… அதிரடி கைது…!!

பாரிஸ் புகைப்பட கலையகத்தில் காவலராக பணிபுரிந்த நபர் அதிக விலை மதிப்புடைய பொருட்கள் பதுக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்சின் தலைநகர் பாரிஸில் கடந்த புதன்கிழமை அன்று பத்தாவது வட்டாரத்திலுள்ள ஒரு புகைப்பட கலையகதின் பின்புறம் உள்ள ரகசிய அறையில் தங்க நகைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அதிக விலை மதிப்புடைய தங்க நகைகளும் ஆடம்பரமான கற்கள், கைக்கடிகாரங்கள் மற்றும் ஒரு லட்சம் யூரோவிற்கும் அதிகமான பணமும் கிடைத்துள்ளது. அதன்பின்பு காவல்துறையினர் இவற்றின் உரிமையாளரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும் உரிமையாளர் குறித்த தகவல் கிடைக்காததால் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், இந்த கலையகத்தில் இலங்கையைச் சேர்ந்த 50 வயதான நபர் காவலராக பணிபுரிந்துள்ளார். அவர்தான் இவை அனைத்தையும் பதுக்கி வைத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது oise என்ற நகரில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |