Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா… “196 நாடுகளின் தலைநகரங்கள்”… டக்கு டக்குன்னு சொல்லும் 3 வயது சிறுமி…!!

சார்ஜாவில் வசித்துவரும் மூன்று வயது குழந்தை 196 நாடுகளின்  தலைநகரங்களை மனப்பாடமாக கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

சார்ஜாவில் சென்னையைச் சேர்ந்த மகேஷ் கிருஷ்ணன் – திவ்யா சொர்ணம் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் காதம்பரி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், காதம்பரி 196 நாடுகளில் தலைநகரங்களை மனப்பாடமாக கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மகளின் அறிவாற்றல் குறித்து அவரது தந்தை மகேஷ் கிருஷ்ணன் கூறியபோது , “என் மகளை பள்ளியில் சேர்க்கலாம் என்று நினைத்தபோது கொரோனா வந்துவிட்டதால் பள்ளியில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் நான் எனது மகளுக்கு வீட்டிலேயே  உபயோகமான வகையில் ஏதாவது கற்று கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். அதனால் காதம்பரிக்கு ஆரம்பத்தில் பத்து முதல் இருபது நாடுகளின் தலைநகர்களின் பெயர்களை கற்றுக் கொடுத்தேன் .  நாளடைவில் அவளுக்கு தலைநகரங்களை கற்பதில் மிகுந்த அளவு ஆர்வம் ஏற்பட்டது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக 196 நாடுகளின்  தலைநகரங்களை கற்றுக் கொடுத்தேன்.

அவற்றை நினைவில் வைக்க கூடிய திறமையை அவள்  பெற்றாள். எந்த ஒரு நாட்டின் தலைநகரை கேட்டாலும் சிறிதும்  யோசிக்காமல் சட்டென்று பதில் கூறக்கூடிய திறமை அவளிடம் உள்ளது.  3 வயது குழந்தையின் இந்த சாதனை உலகிற்கு தெரிய வேண்டும். மேலும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவள்  இடம் பெற வேண்டும் என்பதே பெற்றோராகிய எங்களின் விருப்பம்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |