5முறை ஆட்சியில் இருந்தும் திமுக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கைப் பேணி பாதுகாத்து தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளில் அதிமுக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி இருப்பதாகவும், ஆனால் எந்த திட்டத்தையும் செய்யவில்லை என மு க ஸ்டாலின் பொய் பரப்புரை செய்து வருவதாகவும் அவர் சாடினார்.
இதனை தொடர்ந்து களக்காட்டில் நடைபெற்ற மகளிர் கருத்தரங்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றிய போது, பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கட்சி அதிமுக தான் என குறிப்பிட்டார். மக்களின் பிரச்சினைகளை அறியாதவர் மு.க ஸ்டாலின் என்றும் முதல்வர் சாடினார். 5முறை ஆட்சியில் இருந்த போதும் மக்களுக்கு எதுவும் செய்யாத திமுக இனிமேல் என்ன செய்யப்போகிறது ? என்றும் முக. ஸ்டாலினுக்கு அவர் கேள்வி எழுப்பினார்