Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“கமல் ஓகே சொன்னா… ‘பாபநாசம் 2’ படத்தை இயக்க ரெடி “- இயக்குனர் ஜீத்து ஜோசப்….!!!

‘கமலின் முடிவைப் பொறுத்தே பாபநாசம் 2 ரெடியாகும்’ என இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறியுள்ளார்.

மலையாள திரையுலகில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘திரிஷ்யம்’ . மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ,நடிகை மீனா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது . இந்த படம் தமிழில் கமல்ஹாசன் -கவுதமி நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது . பாபநாசம் படத்திற்கும்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது .

Image result for papanasam

தற்போது இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால்- மீனா நடிப்பில் ‘திரிஷ்யம் 2’ திரைப்படம் வெளியாகியுள்ளது . இதனால் தமிழிலும் பாபநாசம் 2 உருவாகுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது . இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் ஜீத்து ஜோசப் அளித்துள்ள பேட்டி ஒன்றில் ‘கமல் அனுமதி கிடைத்தால் பாபநாசம் 2 படத்தை இயக்க நான் ரெடி . கமலின் முடிவை பொறுத்தே இந்த படம் உருவாகுமா ? இல்லையா என்பதை சொல்ல முடியும்’ என்று கூறியுள்ளார் .

Categories

Tech |