Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபுதேவாவின் ‘பஹிரா’… மிரட்டலான டீசர்… டுவிட்டரில் வெளியிட்ட தனுஷ்…!!!

நடிகர் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள ‘பஹிரா’ படத்தின் டீசரை நடிகர் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் .

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பஹிரா’. திரில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் நடிகர் பிரபுதேவா பத்துக்கும் மேற்பட்ட வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் . மேலும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன், ஜனனி அய்யர், சஞ்சிதா ஷெட்டி, சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், அம்ரியா தஸ்தூர், காயத்ரி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

இந்நிலையில் இந்த படத்தின் அசத்தலான டீஸரை  நடிகர் தனுஷ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . இந்த டீசரிலிருந்து ‘பஹிரா’ படத்தில் பிரபுதேவா ஒவ்வொரு பெண்களையும் கொல்லும் சைக்கோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது . விரைவில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |