பிரிட்டனில் சொந்த மகளை 17 முறை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையின் செயல் முதல் கௌவுரவக் கொலையா கருதப்படுகிறது.
பிரிட்டனில் வசிக்கும் அப்தல்லா யோன்ஸ் என்பவருக்கு 16 வயதுடைய ஹேஷு என்ற மகள் இருதுள்ளார். ஆரம்ப காலகட்டத்தில் இவர் ஒழுக்கமான முறையில் உடை அணிந்துள்ளார். ஆனால் சில நாட்கள் தன்னை வசீகரிக்கும் மேக்கப் அணிந்து வெளிக்காட்டிக் கொண்டார். அவரது பள்ளியில் ஹேஷு தெரியாத ஆண்களே இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் இவர் லெபனான் நாட்டை சேர்ந்த கிறிஸ்துவ இளைஞன் ஒருவரை காதல் செய்துவந்தார். வீட்டில் கட்டுப்பாடுகள் நிறைந்த இஸ்லாமிய பெண்ணாக காட்டிக் கொண்டு வெளியில் மேற்கிந்திய பெண்ணாக நவ நாகரீகமாக உலா வந்துள்ளார். இந்நிலையில் அவர் தனது சொத்த மண்ணான குர்திஸ்தானுக்கு அழைத்து செல்ல இருப்பதாகவும்,அங்கு அவருக்கு திருமணம் செய்து வைக்க கணவன் காத்திருப்பதாகவும் தகவல் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
ஹேஷு குடும்ப கௌவுரவத்தை களங்கப்படுத்தியதற்காக அவரது தந்தையே அவரை கௌரவ கொலை செய்தார். 17 முறை கத்தியால் குத்தி தன் மகளை கொலை செய்துள்ளார். அதன்பின் தானும் கத்தியால் கொத்திக் கொண்டு வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். ஆனால் அவர் உயிர் தப்பிவிட்டார். இந்த தகவல் அறிந்த போலீசார் தந்தை விசாரித்தனர்.
அப்போது அவர், தன் மகளை தீவிரவாதிகள் கொலை செய்து விட்டதாகவும்,தன்னை மாடியில் இருந்து தள்ளி விட்டதாகவும் தெரிவித்தார்.மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் இவர் போய்க் கூறுவதும் உண்மையில் என்ன நடந்தது என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். அதன்பிறகு குற்றம்சாட்டப்பட்டவர் தந்தைக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதுவே பிரிட்டனின் முதல் கௌரவக்கொலை கருதப்படுகிறது.