நடிகை ராஷ்மிகா அடுத்ததாக பிரபல இயக்குனரின் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .
கன்னட திரையுலகில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா . இதையடுத்து இவர் தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து நடித்த கீதா கோவிந்தம் ,டியர் காம்ரேட் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்த படங்கள் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது .
மேலும் நடிகை ராஷ்மிகா தமிழில் நடித்துள்ள முதல் திரைப்படம் ‘சுல்தான்’. நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது . இதுதவிர நடிகை ராஷ்மிகா மந்தனா 2 பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார் . இப்படி தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் இவருக்கு பிரபல இயக்குனரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது. அதாவது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடிக்க உள்ள பிரம்மாண்ட படத்தில் நடிகை ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது .