குழந்தை தனது சாயலில் இல்லாததால் சந்தேகமடைந்த தந்தை பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சாக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜீவ்-சிவரஞ்சனி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தையை பார்த்து, ராஜீவ் தனது முக சாயலில் இல்லாததால் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார்.
அதன்பின் சிவரஞ்சனி குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றார். ஒரு வாரம் கழித்து மனைவியின் தாய் வீட்டிற்கு வந்த ராஜீவ் குழந்தையை வாங்கி கொஞ்சி உள்ளார். பின்னர் அனைவரும் இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருக்கும் போது ராஜீவ் குழந்தையை தூக்கி தரையில் அடித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு குழந்தையை எடுத்த இடத்திலேயே வைத்து சென்றுவிட்டார்.
தூக்கத்திலிருந்து கண் விழித்து பார்த்த சிவரஞ்சனி குழந்தை அசைவு ஏதும் இல்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அதன் பின் குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதன்பிறகு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் ராஜீவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதன்பின் அவர் அளித்த வாக்குமூலத்தின் அனைவரையும் கண்கலங்க வைத்தது. ஏனென்றால் அவர் குழந்தையின் தொப்புள் கொடியை பிடித்து இழுத்து, தரையில் தூக்கி அடித்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். குழந்தை தனது சாயலில் இல்லாததால் மனைவி மீது சந்தேகம் அடைந்து பச்சிளம் குழந்தையை தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.