உலகின் பல்வேறு பகுதிகளில் கடந்த 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் காதலர்கள் பலரும் தங்களுக்கு பிரியமானவர்களுக்கு பல பரிசுகளை வாங்கி தருவார்கள்.
துபாயில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் தனது காதலர் தினத்தன்று காதலிக்கு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். அது என்னவென்றால் ஒட்டகங்கள் இருந்த பண்ணைக்கு சென்று அதன் உரிமையாளருக்கு தெரியாமல் ஒட்டகக் குட்டி ஒன்றைத் திருடி வந்து காதலிக்கு காதலர் தின பரிசாகவும், பிறந்தநாள் பரிசாகவும் கொடுத்துள்ளார். இதனால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். எனினும் இந்த ஒட்டக குட்டி எப்படி கிடைத்தது? என்பது குறித்து காதலி அவரிடம் கேட்கவில்லை.
ஒட்டக பண்ணை உரிமையாளர் தனது பண்ணையில் ஒட்டகக் கன்று பிறந்து சில மாதங்களே ஆன குட்டியை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது காணாமல் போன குட்டியை தேடி வருவதாக தகவல் கிடைத்ததும், இருவரும் அதிர்ச்சியடைந்தனர். போலீசுக்கு பயந்து வாலிபர் காதலியிடம் இருந்த ஒட்டக குட்டியை வாங்கி அதனை திருடிய பண்ணையின் வாசலின் முன்பு விட்டார். போலீசுக்கு போன் செய்து ஒட்டகக் குட்டி ஒன்று பண்ணையின் வெளியில் இருப்பதாக கூறியுள்ளார்.
அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தகவல் தெரிவித்த வாலிபரிடம் விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததார். அந்த பண்ணைக்கும், அடுத்த பண்ணைக்கும் இடையே சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த தூரத்தை கடந்து ஓட்ட குட்டி வர வாய்ப்பில்லை. எனவே சந்தேகம் அடைந்த போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் தனது காதலிக்காக ஒட்டகத்தை திருடி சென்றதை ஒப்புக்கொண்டார்.
இதற்காக இரவு நேரத்தில் அந்த பண்ணைக்கு சென்று திருடியதாக கூறினார். இந்த திருட்டை மறைக்க பல்வேறு பொய்களை தெரிவித்தார். தொடர்ந்து ஒட்டகக் குட்டியை திருடிய வாலிபரையும், திருடிய ஒட்டகத்தை பரிசாக பெற்ற காதலியும் கைது செய்து அவர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து இவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. காதலிக்கு பரிசாக வழங்க ஒட்டகக் குட்டியை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.