எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே என்று வைகோ வழக்கின் தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.
கடந்த 2009 தி.மு.க ஆட்சி காலத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மதிமுக வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் , விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக தேச துரோக வழக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் வைகோ குற்றவாளி என்று தீர்ப்பு அளித்தது , 1 வருட சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் , “2009 இல் ஈழ ஆதரவு பேச்சுக்காக வைகோ மேல் தேசத்துரோக வழக்கு போட்டது யார் ? அன்றைய திமுக அரசு. இதை தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல, “எண்ணையை தடவிக்கிட்டு மணல்ல புரண்டாலும் ஒட்டுறது தான் ஒட்டும் – பழமொழி. எம்பி பதவிக்காக எம்பி எம்பி (அணி) தாவினாலும் கிட்டுறது தான் கிட்டும். – புதுமொழி. டெல்லிக்கு அனுப்ப சொன்னா திஹாருக்கு அனுப்பிச்சிடுச்சே திமு கழகம் ! எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே !” என்றும் மற்றொரு டுவீட்_டும் பதிவிட்டுள்ளார்.