மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆயுஸ் யோஜனா திட்டம் பற்றி வெளியாகும் செய்தியை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆயுஸ் யோஜனா என்ற திட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் பலரும் முதலீடு செய்து வருகிறார்கள். அந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும் பணம் வட்டியுடன் சேர்த்து கிடைக்கும்.
இந்நிலையில் அந்த திட்டத்தின் கீழ் மாதாந்திர பணம் இழப்பீடு வழங்கப்படுகிறது என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இந்தச் செய்தி போலியானது எனவும்,அரசு இது போல் எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே மக்கள் இதை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.