இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 14வது ஐபிஎல் டி20 போட்டிகளின் மினி ஏலம் இன்று நடைபெற்றது. அதில் 292 வீரர்கள் ஏலத்தில் பங்கேற்றனர். மேலும் ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். அதில் ஒட்டுமொத்தமாக 1,114சர்வதேச மற்றும் உள்நாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பெயர்களை பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் எடுத்த தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். சையது முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களில் ஹரி நிஷாந்த், ஷாருக்கான், சித்தார்த், அருண் கார்த்திக், பெரியசாமி, பாபா அபராஜித், முகமது மற்றும் சோனி யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் பாபா அபராஜித் ஆரம்ப காலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். சித்தார்த் கொல்கத்தா அணியில் இருந்த இந்த ஆண்டு வெளியேற்றப்பட்டார்.