2019-20க்கான மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019 20 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இதில் பல்வேறு விதமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன இந்நிலையில் பட்ஜெட் தாக்கலுக்கு பின் பேசிய பிரதமர் மோடி,
2019-20க்கான மத்திய பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று தெரிவித்துள்ளார். மேலும் ஏழ்மையை ஒழிக்கும் வகையில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. புதிய இந்தியாவை உருவாக்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் அமைந்துள்ளது. கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன என பிரதமர் மோடி பாராட்டிப் பேசினார்.