Categories
உலக செய்திகள்

“என்னை ஏன் தனிமைப்படுத்துறீங்க” … காரணம் தெரியாமல் புலம்பிய நபர்… இறுதியில் தெரியவந்த உண்மைக் காரணம்…!!

பிரிட்டனில் சிவப்பு பட்டியல் நாட்டை சேராத ஒருவரை அதிகாரிகள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

முகமது முஸ்தபா என்ற நபர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தன் தாயை கவனிப்பதற்காக பங்களாதேஷுக்கு சென்றுவிட்டு விமானத்தில் பிரிட்டனுக்கு திரும்பியுள்ளார்.  இந்நிலையில் பிரிட்டனில் அவர் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர் . பங்களாதேஷ் பிரிட்டனின் சிவப்பு பட்டியல் என்ற நாடுகளில் இல்லை. இருப்பினும் முஸ்தபா தனிமைப்படுத்தப்பட்டதற்கான காரணம் என்ன தெரியுமா? பங்களாதேஷிலிருந்து பிரிட்டனுக்கு நேரடி விமான சேவை இல்லை என்பதால் அவர் துபாய் சென்றுள்ளார்.

அங்கு  2 மணி நேரம் விமானத்திற்கு காத்திருந்திருந்தததால் அவர் துபாயில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் இரண்டு மணி நேரத்திற்குப் பின்பு துபாயிலிருந்து விமானத்தில் பயணம் செய்த முஸ்தபா லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு  பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட  வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பங்களாதேஷ் என்பது சிவப்பு பட்டியல் நாடு இல்லை இருப்பினும் துபாயில் 2 மணி நேரம் இருந்ததற்காக 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட்ட வேண்டும் மற்றும் ஹோட்டலில் தங்குவதற்கு 1750 பவுண்டுகள் கட்டணம் செலுத்தவேண்டும் என்பது முஸ்தபாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு தேவையான பணமும்  அவரிடம் இல்லை என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திருப்பி செலுத்தும் திட்டதில் முஸ்தபா சேர்க்கப்பட்டுள்ளார். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பிரிட்டனின் சிவப்பு பட்டியல்  நாட்டிலிருந்து பயணம் செய்யவில்லை என்றாலும் சிவப்பு பட்டியல்  நாடு வழியாக பயணம் செய்தால் கூட தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும்  அதற்கான பணத்தை செலுத்த வேண்டும் என்பது தான் தெரிகிறது.

Categories

Tech |