Categories
உலக செய்திகள்

இஸ்லாமியருக்கு எதிராக சர்ச்சைக்குரிய சட்டம் ..!! பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது ..!!

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக புதிய சட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது

இந்த சட்டத்தின்படி  இஸ்லாமிய பள்ளிகளை மூடுவதற்கு அந்நாட்டு காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. தங்களின் கருத்துக்களை வெறுப்பூட்டும் விதமாக இருந்தால் அதனை தடுக்க  போலீசாருக்கு முழு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டம் இஸ்லாமியர்களை அவமதிப்பதாகும், அவர்களின் பேச்சுரிமையை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகவும்  பல விமர்சனங்கள் எழுந்துள்ளன இந்த சட்டம் மசோதா நேற்று பிரான்ஸ் நாடாளுமன்றத்தின் கீழவையில் முன்வைக்கப்பட்டு, ஏற்றுகொள்ளப்பட்டது.

மேலும் இந்த சட்டத்தை ஆதரித்து 347 நாடாளுமன்ற உறுப்பினர்களும், எதிர்த்து 151 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர். இந்த சட்டம் மேக்ரானின் கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் கீழவையில் அதிக ஆதரவை பெற்றிருந்தாலும், அதனை மேலவையில் வாக்கெடுப்புக்கு விடப்படும் போது, மேக்ரோனின் கட்சியினர் மேலவையில் பெருமான்மையாக  இல்லாததால்  வாக்கெடுப்பு என்னவாகும் என்ற பதற்றம் இருக்கிறது. அடுத்த ஆண்டு பிரான்சில் ஜனாதிபதி தேர்தல் வர இருக்கும் நிலையில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களின் அச்சுறுத்தலால் இந்த சட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Categories

Tech |