பூந்தமல்லி அருகே குடும்பத் தகராறு காரணமாக கணவர் தன் மனைவியின் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூந்தமல்லி சுமித்ரா நகரில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம் (30). இவர் அரிசி வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் குன்றத்தூர் சேர்ந்த கீர்த்தனா ( 27) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் சில காலமாக குழந்தை இல்லை. இதனால் இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த கீர்த்தனா தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். தன் மனைவியை பார்ப்பதற்காக பன்னிர்செல்வம் சென்றார் . இவர்கள் இருவரும் வீட்டின் மாடியில் நின்று தனியாக பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை அதிகமாகி வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கோபமடைந்த பன்னீர்செல்வம் மறைத்து வைத்த கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்து, முகம், உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த கீர்த்தனாவை அவரின் பெற்றோர் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கீர்த்தனாவை அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து அருகில் உள்ள குன்றத்தூர் காவல்துறைக்கு தகவல் அறிவிக்கபட்டது. இத்தகவலை பன்னீர்செல்வம் அறிந்துகொண்டு தலைமறைவானார். இதனால் போலீஸார் பன்னீர்செல்வத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.