Categories
உலக செய்திகள்

இந்திய தடுப்பூசியா ? ஆத்தாடி வேண்டவே வேண்டாம்…! எந்த பலனும் இல்லை…. பிரபல நாடு திடீர் முடிவு …!!

தென்னாபிரிக்கா இந்தியாவில் தயாரித்த தடுப்பூசிகளை திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனா தொற்றுக்கு முடிவு கொண்டுவர தடுப்பூசிகளை தயாரித்துள்ளனர். பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான ஆஸ்ட்ரோஜெனேகாவும் இணைந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி தயாரித்துள்ளது. அந்த தடுப்பூசியை இந்தியாவில் ‘கோவிஷில்டு’ என்ற பெயரில் சீரம் நிறுவனம் ஆஸ்ட்ரோஜெனேகா மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமுடன் சேர்ந்து தயாரித்துள்ளது.

இந்நிலையில் சீரம் நிறுவனம் தயாரித்த அந்த தடுப்பூசிகளை தென்னாபிரிக்கா ஒரு மில்லியன் டோஸ்கள் வாங்கி அதனை பரிசோதனை செய்ததில் அது குறைந்த அளவே பாதுகாப்பு தருவதாக தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் மரபணு மாற்றமடைந்த கொரோனாக்கு எதிராக சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிகளை செலுத்தியதில் குறைந்த பாதுகாப்பை வழங்குவதாக கூறி தடுப்பூசிகளை செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

தென்னாபிரிக்கா சீரம் நிறுவனத்திடமிருந்து ஏற்கனவே 1 மில்லியன் டோஸ்களை வாங்கிய நிலையில் அடுத்த சில வாரங்களில் 5,00,000 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் எடுக்க முன்னெடுக்கப்பட்டுள்ளது .ஆனால் இந்திய தயாரிப்பு தடுப்பூசிகள் பயன் தரவில்லை என்பதால் தென்னாபிரிக்கா தடுப்பூசிகளை வாங்க மறுத்துவிட்டது.மேலும்  இதனை குறித்து சீரம் நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை .

Categories

Tech |