Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மே 3ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் – அட்டவணை வெளியீடு …!!

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாண்டிச்சேரியில் 8 லட்சம் பேர் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறார்கள். அவர்களுக்கான கால அட்டவணையை அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வெளியிட்டுள்ளார். அதில் மே மாதம் 3ஆம் தேதி தமிழ் மொழி பாடம், 5ஆம் தேதி ஆங்கிலம் தேர்வு நடைபெறுகிறது.

ஏழாம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு நடைபெற இருக்கிறது.  மே மாதம் 11ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம் போன்ற படிப்புகளுக்கான தேர்வு நடைபெறுகிறது. 17ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல் போன்ற படிப்புக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது.

19ஆம் தேதி மே மாதம் புதன்கிழமை உயிரியல், தாவரவியல், வரலாறு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 21ஆம் தேதி வேதியல், அக்கவுண்டன்சி, புவியியல் படிப்புக்கான தேர்வு நடைபெறும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

Categories

Tech |