Categories
இந்திய சினிமா சினிமா

தியா மிர்சாவின் 2வது திருமணம்… தொழில் அதிபரை மணந்தார்..!!

பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்சா. மாடலிங் துறையில் இருந்து வருகிறார். தமிழில் வெளியான என் சுவாச காற்றே படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். அதன் மூலம் சினிமாவுக்கு வந்தார் இவர் . அதன்பிறகு பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரிக்கவும் செய்தார். சமீபகாலமாக வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். தற்போது நாகர்ஜுனா நடிப்பில் உருவாகி வரும் வைல்டு டாக் என்ற தெலுங்கு படத்தில் தியா நடித்து வருகிறார்.

கடந்த 2014ம் ஆண்டு சாஹில் சங்கா என்ற தொழில் அதிபரை இவர் திருமணம் செய்தார். கடந்த 2019ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான வைபவ் ரேகி என்பவருடன் மும்பையில் தியாவுக்குத் திருமணம் நடந்தது. மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் நடந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |