கடலூர் மாவட்டத்தில் பெண் காவலர்களுக்கு சிறப்பான ஒரு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பெண்கள் வேலைக்கு செல்வது சகஜமான இச்சூழலில் மாதவிடாயின் போது அவர்கள் பணிபுரியும் அலுவலகங்களில் நாப்கின் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். அதுவும் பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண் காவலர்கள் நிறைய சிரமத்தை அனுபவித்து உள்ளார்கள்.
இந்நிலையில் தமிழகத்திலேயே முதல் முறையாக கடலூர் மாவட்டத்தில் ஐந்து ரூபாய் செலுத்தினால் நாப்கின் வரும் திட்டம் பெண் காவலர்களுக்கு தொடங்கப்பட்டுள்ளது. பெண் காவலர்களின் சிரமங்களை உணர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு தரப்பினரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.