ஆபாச படம் பார்ப்பவர்களை எச்சரிக்கும் விதமாக எஸ்.எம்.எஸ் வரும் திட்டத்தை உத்திரபிரதேச அரசு கொண்டுவந்துள்ளது.
ஆபாச படம் பார்ப்பவர்களை எச்சரிப்பதற்காக எச்சரிக்கை மணி அடிக்கும் வகையில் உத்தர பிரதேச அரசும் காவல்துறையும் இணைந்து வித்தியாசமான முன்முயற்சி எடுத்துள்ளது. ஆன்லைனில் ஒருவர் ஆபாச படம் பார்க்கும் பொழுது ஆபாசம் சார்ந்த விவரங்களை தேடினால் அந்த நபரின் விவரங்கள் நேரடியாக காவல்துறையினருக்கு சென்றுவிடும். உடனே 1090 என்ற எண்ணிலிருந்து எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு எஸ்எம்எஸ் வரும். இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் மற்ற மாநிலங்களிலும் அமலாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.