Categories
உலக செய்திகள்

ஆளும் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணம் இதுதான்… பிரிகேடியர் ஜெனரல் விளக்கம்…!

மியான்மரில் ஆளும் கட்சி தலைவர்களை கைது செய்து வைத்திருப்பது ஏன் என்று பிரிகேடியர் ஜெனரல் விளக்கமளித்துள்ளார்.

மியான்மாரில் ஆளும் கட்சித் தலைவர்களை கைது செய்து ஆட்சி அதிகாரத்தை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். ராணுவ வீரர்களின் இந்த செயல் குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, இது ஒரு ஆட்சிக் கவிழ்ப்பு சதி அல்ல.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஏற்பட்ட மோசடி ராணுவத்தின் உத்தரவின் பெயரில் தீர்க்கப்படவில்லை. அதற்காக தற்போது அரசாங்கத் தலைவர்கள் தடுத்து வைத்திருப்பது நியாயமானது. மேலும் தேர்தலை நடத்துவது வென்ற கட்சிக்கு அதிகாரத்தை வழங்குவதும் தான் எங்கள் நோக்கம் என்று தெரிவித்தார்.

Categories

Tech |