கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அறிக்கையை பெடரல் கவுன்சிலுக்கு அனுப்பாததால் சுகாதாரத்துறை அமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சுவிச்சர்லாந்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி பெடரல் சுகாதார துறை, 12 பக்க ஆவணம் ஒன்றில் மாஸ்க் அணிதல், உணவகங்களை மூடுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவிக்குமாறு பெடரல் கவுன்சிலை வலியுறுத்தியுள்ளது. அவற்றை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று பெடரல் சுகாதாரத் துறையை வலியுறுத்தியுள்ளது. ஆனால் சுகாதார துறை அமைச்சர் வெர்சஸ் இந்த ஆவணத்தை பெடரல் கவுன்சிலுக்கு அனுப்பவில்லை. அதனால் அவர் மீது குற்றச்சாட்டு எழுத்தது.
இந்த ஆவணங்கள் அரசுக்கு அனுப்பாததால் பொதுமக்களுக்கு அறிக்கை விடப்படவில்லை. அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி பொதுமக்கள் பல பேர் சேர்ந்து ஒரு இடத்தில் கூடுவதற்கு தடை விதித்தது. அதன்பிறகு செடம்பரில் கொரோனாவின் இரண்டாவது அலை தொடங்கியது. குற்றம்சாட்டப்பட்ட வெர்சஸ் இது குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.