கொரோனா குறித்த வித்தியாச தகவலை வெளியிட்ட மருத்துவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டிசினோ மருத்துவர் ராபர்டோ ஒஸ்டினெல்லி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா குறித்த வித்தியாசமான கருத்தை வெளியீட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டார். அவர் இதற்கு முன்பாக வெளியிட்ட அறிக்கை குறித்து சுவிஸ் மருத்துவ சங்கம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
இந்நிலையில் அவர் கொரோனா சாதாரண வைரஸ் தான் என்றும் மக்களை பயன்படுத்தவே இப்படி செய்யப்பட்டது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் கொரோனா குறித்த வித்தியாச தகவலை அளித்த மருத்துவர் தற்காலிகமாக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் அளிக்கும் விளக்கத்தை பரிசீலனை செய்த பின் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுவிஸ் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.