புதுவையில் அனைத்து எம்.எல்.ஏக்களும் ரஜினாமா செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுவையில் சமிபத்தில் காங்கிரஸில் இருந்து இரண்டு எம்.எல்.ஏக்கள் பாஜகவில் சேர்ந்தனர். இதையடுத்து இவர்கள் இரண்டு பேரும் ராஜினாமா செய்தனர். இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ மேலும் இரண்டு பேர் ராஜினாம செய்தார். இதையடுத்து புதுவையில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, புதுச்சேரியில் ஒட்டுமொத்த அமைச்சரவையை ராஜினாமா செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில் ராஜினாமா செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.