கனடாவில் வசிக்கும் தமிழர் ஒருவர் காணாமல் போனதால் அவர் குறித்த தகவல்களை யாராவது அறிந்திருந்தால் போலீசாரிடம் வந்து தெரிவிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கனடாவைச் சேர்ந்த தமிழரான 56 வயதுடைய ராஜதுரை கஜேந்திரன் என்ற நபர் கடந்த 14ஆம் தேதி மாலை 5.30மணிக்கு காணாமல் போனார். அதன் பிறகு இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் கடைசியாக கென்னடி எக்ளிண்டன் அவே இ என்ற பகுதியில் இருந்துள்ளார்.
இந்நிலையில் அவரது அங்க அடையாளங்கள் சிலவற்றை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், ராஜதுரை உயரம் 5 அடி ஒன்பது அங்குலம் என்றும் அவர் குறித்த சில அடையாளங்களும் வெளியிடப்பட்டுள்ளது. அவர் கடைசியாக கருப்பு நிற கோர்ட்டும், கருப்பு நிற தொப்பியும் அணிந்திருந்தார். எனவே அவர் குறித்த தகவல் யாருக்காவது தெரிந்திருந்தால் போலீஸாரிடம் முன்வந்து கூறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
MISSING MAN:
Rajadurai Gajendran, 56
– last seen on Feb. 14, at 5:30 p.m., in the Kennedy Rd & Eglinton Ave E area
– he is described as 5'9", 150 lbs., brown eyes, bald, clean shaven
– last seen wearing a black coat, black hat and black slippers#GO289672
^al pic.twitter.com/jDMDvgL27u— Toronto Police Operations (@TPSOperations) February 15, 2021