Categories
உலக செய்திகள்

தேசிய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட இரட்டை சகோதரிகள்… இணையத்தில் வெளியான தகவல்…!

தேசிய கைபந்து அணியில் விளையாடி வந்த இரட்டையர்கள் திடீரென அணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

தென்கொரிய தேசிய கால்பந்து அணியில் லீ ஜே யோங்,லீ டா யோங் என்ற 24 வயதுடைய இரட்டையர்கள் விளையாடி வந்தனர்.இந்நிலையில் அவர்கள் திடீரென அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டது. இது அவர்களை அணியில் இருந்து வெளியேற காரணமாக அமைந்தது.

இணையத்தில் வெளியான குற்றச்சாட்டு என்னவென்றால், இவர்கள் இருவரும் பள்ளியில் படிக்கும்போது மற்றவர்களை வம்பிழுத்து தொல்லை கொடுத்துள்ளனர். சக மாணவர்களை அடித்து, அவமானப்படுத்தி, கத்திகளை காட்டி மிரட்டி, அவர்களிடம் இருக்கும் பணத்தை திருடி வந்துள்ளனர். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் தற்போது இணையத்தில் பரவியதால் அவர்கள் அணியிலிருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Categories

Tech |