Categories
தேசிய செய்திகள்

மோடிக்கு என்ன தெரியும் ? எதுக்கு பிடிவாதமா இருக்கீங்க ? மத்திய அரசை சாடிய பிரியங்கா காந்தி …!!

புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகளே எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அதனை திரும்ப பெறாமல் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன் ? என காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் பீஜ்னோர் பகுதியில் நடைபெற்ற விவசாயிகளின் பிரம்மாண்ட ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது விவசாயிகளின்  இடையே உரையாற்றிய அவர் புதிய வேளாண் சட்டங்கள் தங்களது வாழ்வாதாரத்தை அளிக்க கூடியவை என்பதை விவசாயிகள் அறிந்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்காகனது என பிரதமர் கூறி வருவதாகவும் விவசாயிகளை விட  பிரதமர் மோடிக்கு நன்கு விவசாயம் தெரியுமா ? எனவும் திருமதி பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார். 80  நாட்களாக கடும் குளிரில் போராடி வரும் விவசாயிகள் தற்போது கோடை காலத்தை எதிர்நோக்கி உள்ளதாக குறிப்பிட்ட அவர், விவசாயிகளே இந்த சட்டங்கள் வேண்டாம் என  புறக்கணித்துள்ள நிலையில், இதனைத் திரும்பப் பெறாமல் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது ஏன் ?  எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |