காதலர் தினமான நேற்று இரண்டு ஆண்டுகளுக்கு முன் காரணம் தெரியாமல் தன் மகளைப் பிரிந்த தாய் பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
கனடாவில் பிரியா-ராஜ்குமார் என்ற தம்பதியினர் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு ரியா ராஜ்குமார் என்ற மகளும் இருந்துள்ளார்.கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பிரியாவுக்கும் அவரது மகளுக்கு பிறந்தநாள். கணவன் மனைவி தனியாக இருக்கும் நிலையில் பிரியாவை அவரது தந்தை அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். அதேபோல அவர்களின் பிறந்த நாளன்றும் தன் மகளை பிரிந்து இருக்கும் கணவருடன் பிரியா அனுப்பி வைத்துள்ளார்.
அதன்பின் ரியாவின் தாயான பிரியாவுக்கு தந்தை ராஜ்குமாரிடம் இருந்து ஒரு போன் கால் வந்தது. அதில் ரியாவின் தந்தை, இனி உன்னால் உன்னால் ரியாவை பார்க்க முடியாது. நான் பட்ட கஷ்டத்தை நீயும் படவேண்டும். எனக்குள் இருக்கும் வலியையும்,வேதனையும் நீ வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கப் போகிறாய். நானும் ரியாவும் எனது தந்தையிடம் போகிறோம் என்று கூறி போனை கட் செய்தார்.
இதனைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த பிரியாவின் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். ஆனால் தாயார் புகார் அளித்தபோது நேரம் மாலை 5.30 ஆகும். ஆனால் போலீசார் ஆம்பர் எச்சரிக்கை விடுக்கும் போது மணி இரவு 11. நள்ளிரவில் போலீசார் ராஜ்குமாரை அவரது வீட்டில் கண்டுபிடித்தனர். அவர் தன் குழந்தை ரியாவை சுட்டுக் கொன்றுவிட்டு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
ஆனால் அவர் படுகாயங்களுடன் கைது செய்யப்பட்டார். சில நாட்களில் அவரும் உயிரிழந்தார்.
தன் மகளை இழந்து தவிக்கும் பிரியா இதற்கு காரணமாக இருந்த வரை சட்டத்திற்கு முன் நிறுத்த முடியாமல் போன கோபத்தில் குழம்பிப் போயிருக்கிறார். இந்நிலையில் ரியாவின் கேள்விக்கு இன்னும் பதில் தெரியவில்லை. அது என்னவென்றால், தன் மகள் காணாமல் போன உடனே போலீசார் ஏன் ஆம்பர் எச்சரிக்கை விடக்கவில்லை.
போலீசார் ராஜ்குமாரின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று ஏன் பார்க்கவில்லை. அவர் மருத்துவமனையில் இருக்கும்போது என்ன கூறினார் என்று பல கேள்விகளை பிரியா எழுப்பியுள்ளார். மகளை காரணமின்றி இழந்த தாயார் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியப்படும் விஷயமாக இருக்கிறது.