Categories
உலக செய்திகள்

என்ன கல்யாணம் செய்து கொள்கிறாயா? இளம் பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வெளிநாட்டு இந்தியர்… வைரலாகும் வீடியோ…!

துபாயில் காதலர் தினத்தை முன்னிட்டு இளைஞர் ஒருவர் இளம் பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதனால் துபாயில் பல்வேறு சுவாரஸ்யங்கள் உடன் கூடிய காதலர் தினம் நடத்தப்பட்டது. அதில் முக்கியமான ஒன்றாக, துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியின் வளாகத்தில் கடந்த காதல் நிகழிச்சி இருக்கிறது. இந்தியாவை சேர்ந்த சிராக் என்ற வாலிபர் தனது பெண் தோழியான கிருத்திகாவை அழைத்துக் கொண்டு கண்காட்சிக்கு சென்றுள்ளார்.

அவரிடம் சிராக் காதலைச் சொல்லப் போகும் விஷயம் அவருக்குத் தெரியாது. அதன்பின் வளாகத்திற்குள் சென்றதும் ஊழியரிடம் ஒருவர் அந்த பெண்ணிடம் பலூன் ஒன்றை அளித்தார். அதன்பின் வழியில் அந்தப் பெண்ணின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களை கையசைத்து வரவேற்றனர்.

அப்போது இளைஞன் அப்பெண்ணிடம் முட்டி போட்டு மோதிரத்தை நீட்டி என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டார். அவரது கேள்வியால் திகைத்துப் போன அந்தப் பெண் சில வினாடிகளுக்கு பிறகு ஆம் என பதிலளித்தார். பின்பு அப்பெண் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அவருக்கு இளைஞர் மோதிரத்தை அணிவித்து இருவரும் கட்டி அணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியானது வீடியோவாக எடுக்கப்பட்டு எக்ஸ்போர்ட் 2020 கண்காட்சி அமைப்பு சார்பில் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |