Categories
உலக செய்திகள்

ஆறாவது இடத்துக்கு வந்துருச்சு… இத கண்டிப்பா அமல் படுத்தனும்… சுகாதார ஆணையம் முக்கிய அறிவிப்பு…!

பிரான்சில் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி முதல் நெருக்கடி அமைப்பை அமல்படுத்தப் போவதாக சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கும் பிரான்ஸில் உருமாறிய புதியவகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அவற்றை எதிர்கொள்ள “நெருக்கடி அமைப்பை” அமல்படுத்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம்  மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்தல், அவசரமற்ற அறுவை சிகிச்சையை தாமதப்படுத்துதல் மற்றும் மருத்துவ ஊழியர்களை அணிதிரட்டல் உள்ளிட்டவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பு ஊரடங்கில் இருந்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் தற்போது மீண்டும் விதிக்கப்படும். இந்த நடவடிக்கைகள் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி என்று டிஜிஎஸ் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |