Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக சர்வதேச சதி…. கிரெட்டா துன்பெர்க் ட்விட் அம்பலம்… பெங்களூரில் ஒருவர் அதிரடி கைது ….!!

ஸ்வீடன் நாட்டு சுற்று சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்ததில் உள்ள சர்வதேச சதி வெளியாகியது .

இந்திய விவசாயிகள் டெல்லி எல்லைப்பகுதியில் பஞ்சாப், ஹரியானா , மேற்கு உத்திர பிரதேசம்   சிங்கு, திக்ரி மற்றும் காசிப்பூர் எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் குடியரசு தினமான ஜனவரி 26 அன்று விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பை நடத்தினர். இதனால் பெரிய வன்முறை ஏற்பட்டு  சுமார் 500 காவல்துறையினர் காயமடைந்தனர்.

இந்நிலையில் ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். அதில் சதித்திட்டம் விபரங்கள் உள்ளடக்கிய டூல் கிட் என்னும் ஒரு தொகுப்பை தவறுதலாக பகிர்ந்து கொண்டதில் தில்லியில் நடந்த போராட்டத்தின் சர்வதேச சதி வெளியாகியது .அந்த டூல்கிட் தொகுப்பில் ஜனவரி 26 ஆம் தேதி நடந்த போராட்டங்கள் பற்றிய விவரங்களும் இருந்தது. மேலும் அதில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்களை டேக் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது .

டெல்லி காவல்துறை இந்த டூல்கிட் தொகுப்பை பதிவிறக்கம் செய்தவர்களின் கணினி முகவரியை கண்டுபிடிக்க கூகிளின் உதவியை நாடியது. பிப்ரவரி 14 ஞாயிற்றுக்கிழமை அன்று பெங்களூரை சேர்ந்த திஷா ரவி என்ற 21 வயது சுற்றுச்சூழல் ஆர்வலர் அந்த டூல் கிட்டில் சில மாற்றங்களை செய்து மற்றவர்களுக்கு அனுப்பியுள்ளார் .இதுதொடர்பாக காவல் துறையினரால் பெங்களூரு சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டார்.

Categories

Tech |