Categories
தேசிய செய்திகள்

வெறும் ஒரு ரூபாய்க்கு… மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செய்தி…!!!

ஒடிசாவில் ஏழை மக்களுக்கு மருத்துவர் ஒருவர் ஒரு ரூபாய் கட்டணத்தில் மருத்துவ சேவை அளித்து வருகிறார்.

ஒடிசாவில் சம்பல்பூர் மாவட்டம் பொருளா என்ற பகுதியில் “வீர் சுரேந்திர சாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் ரிசர்ச்”என்ற பெயரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அது சங்கர் ராம் சந்தனி என்பவர் துணை பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் கடந்த 12ஆம் தேதி புர்லா பகுதியில் தனியாக மருத்துவமனை ஒன்றை தொடங்கினார். அவரிடம் சிகிச்சை பெற வரும் மக்களிடம் ஒரு ரூபாயை மட்டும் கட்டணமாக பெறுகிறார். சிலரிடம் ஒரு ரூபாய் கூட பெறாமல் இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.

அவர் தன்னுடைய வாடகை வீட்டில் குடியேறி கிளினிக் தொடங்கி ஏழை மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார். மேலும் நலிவுற்ற மக்களுக்கு இலவச சேவை அளிக்க வேண்டும் என்பதே தனது நீண்டநாள் கனவாக இருந்ததாக அவர் கூறியுள்ளார். அவரின் இந்த சேவைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மேலும் இது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |