இயக்குனர் விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தை விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது . இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர் . மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் .
Valentine’s Day Song for all you lovely people around😍🥰https://t.co/xcv14dpyvT #RenduFailure
From #KaathuVaakulaRenduKaadhal #Anirudh25
ThankU @anirudhofficial for giving me another song straight from your heart 💕 love u@VijaySethuOffl #Nayanthara @Samanthaprabhu2
— VigneshShivan (@VigneshShivN) February 14, 2021
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடலான ‘ரெண்டு காதல்’ பாடல் வீடியோ வெளியாகியுள்ளது . ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த ‘நானும் ரவுடிதான்’ படம் சூப்பர்ஹிட் ஆனதால் இந்த படத்தின் மீதும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.