Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“காதலன் தான் முக்கியம்”… எடுபடாத தாய்ப்பாசம்…. நர்சிங் மாணவியின் முடிவால் கதறும் குடும்பம்..!!

நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கும் தந்தையும், கட்டிட வேலை செய்யும் தாயும் விட்டு தன் காதல் தான் வேண்டும் என்று காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார் தூத்துக்குடியை சேர்ந்த இளம்பெண்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே அஞ்சுகிராமம் பகுதியை சேர்ந்த பவித்ரா நர்சிங் படித்து வருகிறார். எப்போதும் போனில் நேரத்தை செலவிடும் இவர் தன்னுடன் படிக்கும் மற்றொரு மாணவனை காதலித்துள்ளார். பவித்ராவின் தந்தை வாத நோயால் படுத்த படுக்கையாக கிடக்கிறார். தாய் கட்டிட வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். பவித்ராவுக்கு மூன்று சகோதரிகள், ஒரு சகோதரர் உள்ளார். படிப்பிற்காக வாங்கிய கடனை 5 லட்சம் உள்ள நிலையில் தாய் கஷ்டப்பட்டு வருகிறார்.

இவை அனைத்தையும் விட்டுவிட்டு காதலனுடன் கையைப்பிடித்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் பவித்ரா. இறுதி பருவத் தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளார். மகளை காணவில்லை என்று பவித்ராவின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு தனது காதலருடன் கையை இறுக்கிப் பிடித்தவாறு வந்துள்ளார். மேலும் பருவ தேர்வு முடிய 2 மாதங்கள் உள்ளது.

இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பிரச்சினை இல்லை என்று காவலர்கள் எடுத்துக் கூறியும் அதை கேட்காமல் தாங்கள் மேஜர் என்பதை காரணம் காட்டி தாயுடன் செல்ல மறுத்து காதலனுடன் சென்றுள்ளார். கண் கலங்கி நிற்கும் சகோதரனும், கதறி அழும் தாய்க்கும் இடையில் காதல் தான் முக்கியம் என்று அவர் காவல் நிலையத்தை விட்டு சென்றார்.

Categories

Tech |