மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மளிகை கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி அண்ணாநகர் பகுதியில் அசுரப் அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக மளிகை கடை ஒன்றை அதே பகுதியில் நடத்தி வந்துள்ளார். இவருக்கு நூருஸ் ஹீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அசுரப் அலி மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சேலம் செவ்வாய்பேட்டைக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரது மோட்டார் சைக்கிள் கே. ஆர் தோப்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென பின்னால் வந்த கார் இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த தாரமங்கலம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.