பிரதமர் மோடி தமிழகம் வருவதை ஒட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க டெல்லியில் இருந்து பிரதமர் மோடி சென்னை புறப்பட்டார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மோடி காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறார். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சென்னையை தொடர்ந்து கொச்சியில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருவதையொட்டி சென்னையில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை. கோயம்பேட்டிலிருந்து சென்ட்ரல் வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக அண்ணாசாலை செல்லலாம். ராயபுரத்தில் இருந்து பாரிமுனை செல்லும் வாகனங்கள் இப்ராகிம் சாலை மின்ட் சந்திப்பு வழியாக செல்லலாம்.