கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வடகால் பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எழுச்சூர் பகுதியில் வசித்து வரும் சூர்யா என்ற பெண்ணை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது மனம் உடைந்த சூர்யா தனது வீட்டிலிருந்த பெயிண்டில் கலக்கும் திரவத்தை எடுத்து குடித்து விட்டார்.
இதனையடுத்து அவரை மயங்கிய நிலையில் மீட்ட உறவினர்கள் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் சூர்யா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.