Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கோவில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்… கலக்கப்பட்ட மருந்து… நோய் பரவும் அபாயம்…!!

கோவில் குளத்தில் மீன்கள் செத்து மிதந்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அதை அப்புறப்படுத்த வேண்டிய பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கண்டி பகுதியில் வெண்மலையப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்திலுள்ள ஏராளமான மீன்கள் திடீரென செத்து மிதந்துள்ளன. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, ஏராளமான விவசாயிகள் இந்த குளத்தின் அருகே உள்ள தங்களது விவசாய நிலங்களில் முந்திரி பயிரிட்டு அதனை பராமரித்து வருகின்றனர்.

ஆனால் அந்த பயிருக்கு பூச்சி மருந்து அடிப்பதற்கு தேவையான தண்ணீரை இந்த குளத்தில் இருந்து எடுத்து செல்லும் போது, தவறுதலாக இந்த குளத்தில் உள்ள தண்ணீரில் மருந்தை சிலர் கலந்துள்ளனர் என்றும், அதனால் தான் இந்த மீன்கள் செத்து மிதக்கின்றன என்றும் தெரிவித்துள்ளனர்.  மேலும் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் இது பொதுமக்களுக்கு தொற்று நோய்களையும், அந்த குளத்தில் தண்ணீர் குடிக்க வரும் கால்நடைகளின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும். எனவே இந்த மீன்களை அப்புறப்படுத்தி நோய் பரவாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |