Categories
அரசியல் மாநில செய்திகள்

“தலைவராக ராகுலே தொடர வேண்டும்” திருநாவுக்கரசர் கருத்து…!!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டும் கைப்பற்றி படுதோல்வி அடைந்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜினாமா செய்து வந்தனர். அதே போல ராகுல் காந்தியும் கடந்த மே 25_ஆம்தேதி நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார்.

Image result for ராகுல் காந்தி

ஆனால் ராகுலின் ராஜினாமாவை ஏற்க மறுத்த காங்கிரஸ் தலைவர்கள் , காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே நீடிக்குமாறு வற்புறுத்தினர். மேலும் காங்கிரஸ் கட்சி ஆளும் முதல்வர்கள்  அசோக் கெலாட், கமல்நாத் , அமரிந்தர் சிங் , பூபேஷ் பாகல் , நாராயணசாமி ஆகியோரும்  ராகுலிடம்  ராஜினாமா முடிவை வாபஸ் பெறுமாறு தெரிவித்தனர். ஆனாலும் ராஜினாமா முடிவில் உறுதியாக இருந்த ராகுல் நேற்று நான் காங்கிரஸ் தலைவர் கிடையாது.ராஜினாமா செய்து விட்டேன் புதிய தலைவரை விரைவில் தேர்ந்துடுங்கள் என்று விளக்க அறிக்கை வெளியிட்டார்.

Image result for திருநாவுக்கரசர் ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , மக்களவை உறுப்பினருமான  திருநாவுக்கரசர் கூறுகையில் , காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் என்பதுதான் தொண்டர்களின் விருப்பம்.  ஆனால் அதை அவர் ஏற்காதபட்சத்தில் செயற்குழுவை கூட்டி அடுத்த தலைவர் குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |