சென்னை திருவெற்றியூரில் 72வயது ஒரு மூதாட்டி பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனை வளாகத்தில் கிடந்தார். அவரை மீட்ட போலீசார் மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெரு அருகே உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் ரத்த காயத்துடன் ஒரு மூதாட்டி அடிபட்டு கிடந்தார். இதையடுத்து அப்பகுதியில் சென்றவர்கள் திருவெற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தலையில் அடிபட்ட நிலையில் இருந்த அவரை ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த மூதாட்டி திருவெற்றியூர் காலடிப்பேட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.
அரசு மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டபோது 10.40 மணி அளவில் இளைஞர் ஒருவர் பாட்டியை கையை பிடித்து கூட்டி வருவதும், மறைவான பகுதிக்கு சென்று சில நிமிடம் கழித்து வெளியேறுவதும் தெரிய வந்தது . ஒரு வேளை பாலியல் பலாத்காரம் செய்து மூதாட்டியை கல்லை போட்டு கொல்ல முயற்சி செய்திருக்கலாம் என்று முடிவு செய்த காவல்துறையினர் அது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டி சுய நினைவுக்கு வந்த பிறகுதான் இது குறித்து தெரியவரும்.