பட்டாசு ஆலையில் விபத்து ஏற்பட்டதை குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நேற்று விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 19 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். தொழிற்சாலை நடத்துபவர்கள் பணத்தின் மீதுள்ள பேராசையின் காரணமாக குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டுவதற்காக ஏற்பட்டுள்ள கவனக்குறைவால் தான் இந்த விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதை குறிப்பிட்டு வைரமுத்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், “மனிதர்கள் பட்டாசுகளை வெடிப்பது போய். இப்போது பட்டாசுகள் மனிதர்களை வெடிப்பது துயரமானது. அதனினும் மனித உயிர்களின் விலை சில லட்சங்கள் ஆகிப் போவது” என அறிவித்துள்ளார்.