Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம ட்ரெண்ட்… யுவன்-ராஷ்மிகாவின் பட்டைய கிளப்பும் ‘டாப் டக்கர்’ பாடல்…!!!

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘டாப் டக்கர்’ பாடல் வீடியோ யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது .

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் அமர் ப்ரீத் ஷாப்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள பாடல் ‘டாப் டக்கர்’ . இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா, அமித் பாட்ஷா ,ஜோனிடா காந்தி ஆகியோர் பாடியுள்ளனர் . இந்த பாடலுக்கு பிரபல நடிகையை ராஷ்மிகா மந்தனா நடனமாடியுள்ளார் . மேலும் ஒய் ஆர் எஃப் மற்றும் சாகா மியூசிக் இணைந்து தயாரித்துள்ள இந்தப் பாடலின் தமிழ் வரிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் .

சமீபத்தில் டாப் டக்கர் பாடலில் பணியாற்றிய யுவன்- ராஷ்மிகாவின் அசத்தலான புகைப்படங்கள் மற்றும் பாடலின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று இந்தப் பாடலின் வீடியோ வெளியாகி தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கிறது .

Categories

Tech |