Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நேற்று நடந்த துயரத்திலிருந்து மீள்வதற்குள்…. இன்று மீண்டும் வெடி விபத்து…. அதிர்ச்சி தகவல்…!!

நேற்று நடந்த வெடி விபத்தையடுத்து இன்று மீண்டும் வெடி விபத்து  ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பக்கத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சோகத்தில் இருந்து இன்னும் மீண்டு வருவதற்குள்ஒன்று கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 200க்கும் மேற்பட்ட இன்று காலை பணியாற்றிக் கொண்டு இருந்துள்ளனர்.

இதையடுத்து வெடிமருந்துகளை உள்ளே எடுத்து செல்லும்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வெடிவிபத்தில் சுரேஷ் என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மேலும்  பட்டாசு ஆலையின் உள்ளே யாரும் சிக்கி இருக்கிறார்களா? என்பது குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.

Categories

Tech |