அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனால்டு டிரம்ப் கொரோனா ஏற்பட்டபோது மிகவும் ஆபத்தான நிலைமைக்கு சென்ற மறைக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவிக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அப்போது ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கு எதிராக ட்ரம்ப் நேரடி விவாதத்தில் பங்கேற்க சென்று கொண்டிருந்தார்.
அதன் பிறகு வெள்ளை மாளிகையில் இருந்து ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் போது டோனால்ட் டிரம்ப் இன் ஆக்சிஜன் அளவு ஆபத்தான நிலையில் குறைந்ததாகவும், நிமோனியாவுக்கான அறிகுறிகள் தென்பட்டதாகவும் டிரம்பிற்கு மிகவும் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் பிரசார நெருக்கடி இருந்து வந்ததால் பொதுமக்களுக்கு வழங்கப்படாத மருந்துகள் சிலவற்றை ட்ரம்பிற்கு அளித்து மூன்று நாட்களில் அவரை மருத்துவர்கள் குணமடைய செய்துள்ளனர். அப்போது தேர்தல் கால கட்டம் நிலவியதால் டிரம்ப் ஆபத்தான நிலைமைக்கு சென்றதை வெளியிடாமல் இருந்துள்ளனர். ஆனால் டிரம்பிற்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்ட சான்றிதழை மருத்துவமனை நிர்வாகம் இதுவரை அளிக்கவில்லை என தெரியவந்துள்ளது.