தமிழகம் முழுவதிலும் விவசாயிகள் பயிர்க் கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் எதிர்க் கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த சில நாட்களாக அதிமுக தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
அதன் முக்கிய பகுதியாக விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதனால் விவசாய மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். இதனை அடுத்து தலைமைச் செயலகத்தில் பயிர் கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
மேலும் பொதுமக்கள் குறைகளை தீர்க்கும் 1100 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இதனையடுத்து விவசாய கடன் தள்ளுபடி காண ரசீதை இன்று முதல் விவசாயிகள் அனைவரும் பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு ரசீது பெரும் விவசாயிகளுக்கு மட்டுமே பயிர் கடன் தள்ளுபடி செய்யப்படும்.