தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து மட்டும் தினசரி ஏர் அரேபியா விமானம் இயக்கப்பட்டு வருகிறது. அப்படி வெளிநாட்டிலிருந்து வருபவர்களை அதிகாரிகள் பரிசோதனை செய்து சந்தேகப்படும் படியாக இருந்தால் மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்துவார்கள். இந்நிலையில் தங்க கடத்தல் கும்பலை சேர்ந்த சிலர் சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததாக ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை இயக்குனர் சதீஷ் தலைமையில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது சிவகங்கை, திருச்சி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் நடவடிக்கையில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த ஐந்து பேரையும் அது தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்து பார்த்தபோது தங்கத்தை பொடியாக்கி அதில் பேஸ்ட் கலந்து டேப் சுற்றி ஆசனவாய் பகுதியிலும் ஒரு சிலர் தங்கத்தை பொடியாக்கி மாத்திரை வடிவில் உருவாக்கி வயிற்றுக்குள் விழுங்கி கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் 5 போரையும் அழைத்து சென்று இனிமா கொடுத்து தங்கத்தை வெளியே எடுத்துள்ளனர். இவர்களிடமிருந்து மொத்தமாக 6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த 6 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.